பொன்னியின் செல்வன் பராக்! பராக்! முதல் காணொளி வெளியீட்டு விழா நிகழ்ச்சி!...
இன்று செப்டம்பர் 23 ஆம் தேதி பொன்னியின் செல்வனின் வந்திய தேவன் பாதையில் ஒரு அனுபவ பயணத்தின் முதல் காணொளி வெளியீட்டு நிகழ்ச்சி நுங்கம்பாக்கத்தில் நடைபெறுகிறது.
இன்று மாலை 5.30 மணிக்கு இலக்கம். 30/18, 5 வது குறுக்குத்தெரு, லேக் ஏரியா நுங்கம்பாக்கம் என்ற முகவரியில் அமைந்துள்ள Le Magic Lantern - Preview Theatre ல் நமது சிறப்புமிக்க பொன்னியின் செல்வனின் வந்திய தேவன் பாதையில் ஒரு அனுபவ பயணம் குறித்த முதல் காணொளி வெளியிடப்படுகிறது.
இந்திகழ்ச்சிக்கு தலைமை ஏற்று காணொளியினை வெளியிடுபவர் மாண்புமிகு தொழில் ,முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம் , ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள்.
பொன்னியின் செல்வனின் ரசிகர்கள் அனைவரும் வாருங்கள் விழாவினை ரசிப்போம். இவ்விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் கல்கி குழுமம் சார்பாக நன்றியுடன் வரவேற்கிறோம்.
அனைவரும் வாருங்கள்! பொன்னியின் செல்வனை கொண்டாடி மகிழ்வோம்!!!