பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

'பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம்' ! வெளியீட்டு தேதி அறிவிப்பு?

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு வரவிருக்கிற 'பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம்' குறித்த அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கியிருந்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி சக்கை போடு போட்டது . மணிரத்னத்துடன் இணைந்து இளங்கோ குமாரவேல் திரைக்கதையை எழுதியுள்ளார். இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். இந்த திரை படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்திய அளவில் இந்தப் படம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பொன்னியின் செல்வன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.உதயநிதி சொன்னது போல் பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகுமா?என்பது இன்று தெரிந்துவிடும்.

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும் நடித்திருந்தனர். மேலும் நாவலில் மிகவும் புகழ்பெற்ற வேடமான நந்தினி என்ற கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் வெளுத்து வாங்கியிருந்தார். அழகு புதுமை குந்தவையாக திரிஷாவும் , பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், வானதியாக சோபிதாவும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம் குறித்த அப்டேட் மாலை 4 மணிக்கு வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது . இதனையடுத்து பொன்னியின் செல்வன் பட வெளியீட்டுத் தேதியாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com