இணையத்தை கலக்கி வரும் 'சொல் காதோடு சொல்'... பாடல் !

Trisha sobitha
Trisha sobitha
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன் . இத்திரைபடம் ரசிகர்களிடையே பெறும் ஆதரவை பெற்று வசூலில் சக்கை போடு போட்டது. படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும் நடித்தனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், வானதியாக சோபிதாவும் நடித்திருந்தனர்.

அதில் பொன்னியின் செல்வன் படத்தின் அதிக நீளம் காரணமாக, படத்திலிருந்து ‘சொல் காதோடு சொல்’ என்கிற பாடல் நீக்கப்பட்டிரூந்தது. தற்போது அந்த பாடலின் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனம்தயாரித்திருந்தது. அத்தோடு இப்படம் உலகமெங்கும் ரூ.500 கோடிக்கு மேல்வசூலித்து, இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ்படம் என்கிற சாதனையையும் பொன்னியின் செல்வன் படைத்துள்ளது. அடுத்த ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திலிருந்து நீக்கப்பட்ட அந்த ' சொல்' என்கிற பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

குந்தவை திரிஷாவும், வானதி ஷோபிதாவும் தங்களது தோழிகளுடன் அழகு மயிலாக நடனமாடும் காட்சிகளுடன் கூடிய அழகியல் நிரம்பியுள்ள இந்த வீடியோவை தற்போது பொன்னியின் செல்வன் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து வருகிறார்கள். தற்போது வெளியான அந்த வீடியோ இணைய உலகினை கலக்கி வருகிறது. இணையத்தில் வைரலான அந்த விடியோவை பலறையும் கவர்ந்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com