தென்னிந்தியா புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரின் சார்பில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள். லட்சக்கணக்கான புத்தகங்கள் என மாபெரும் கண்காட்சியான இது, சேலம் புதிய பேருந்து திடலில் கடந்த ஞாயிறன்று 20-11-22 தொடங்கி, பொதுமக்களின் வேண்டுகோளின்படி 30.11.22லிருந்து, 4-12-22 வரை மேலும் நீட்டிக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
ஒவ்வொரு நாளும் சுமார் 15000 பேர் வருகை தந்தது சிறப்பு. இது, பதிப்பகத்தினருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களும் வந்து புது அனுபவத்தை அடைந்தது குறித்து ஆசிரியர்கள் பாராட்டினர்.
முதன் முதலாக அரசு சார்பில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15 நாட்கள் நடத்திய இந்தக் கண்காட்சியில் பார்வையாளர்களாக வந்து சென்றவர்கள் சுமார் நான்கு லட்சத்திற்கும் மேல். மூன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றுள்ளது. இதை ஏற்பாடு செய்து வழிநடத்திய எங்களுக்கு பெரும் மனநிறைவையும் உற்சாகத்தையும் இது தருகிறது.
அதிலும் வாசிப்பாளர்கள் அதிக அளவில் சரித்திர நாவல்களை வாங்கிச்சென்றுள்ளனர் என்பது, மீண்டும் மக்கள் வரலாற்றின் பழைமைகளையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது நிரூபித்துள்ளது. கடந்த 15 நாட்களாக சேலத்தில் கோலாகலமாக நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் வரலாற்று எழுத்தாளர்களுக்கு அதிக அளவில் மகிழ்ச்சியை தந்துள்ளார்கள் வரலாற்றுப் பிரியர்கள்.
இதற்கு கல்கியின் பொன்னியின் செல்வன் மாபெரும் உந்துதலாக இருந்தது என்பதைச் சொல்லவும் வேணுமா?