ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் அனுமதி!

ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் அனுமதி!
Published on

இத்தாலி தலைநக்ர் ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைந்து நலமடைய அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறார். இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப் பட்டுள்ளார்.  மருத்துவமனையில் போப் பிரான்சிஸ், சில நாட்கள் சிகிச்சை பெற வேண்டியுள்ளது என்று வாட்டிகன் அறிக்கை தெரிவித்துள்ளது.

மருத்துவப் பரிசோதனையில், நுரையீரல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. குருத்தோலை ஞாயிறு, புனித வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் என அடுத்தடுத்து முக்கிய நிகழ்ச்சிகள் வரும் நிலையில், அவற்றில் பிரான்ஸிஸ் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

86 வயதான போப் பிரான்சிஸ், முழங்கால் வலியால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப் பட்டது. எனினும், சுறுசுறுப்புடன் தேவாலய பணிகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வந்த போப் பிரான்சிஸ், சில தினங்களாக மூச்சுத் திணறலால் பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஏப்ரல் இறுதியில் ஹங்கேரி செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதுவும் கேள்விக் குறியாகி உள்ளது. போப் பிரான்சிஸ் விரைந்து நலம்பெற மக்கள் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com