பாஜகவில் இணைந்த பிரபல நடிகை!

பாஜகவில் இணைந்த பிரபல நடிகை!
Published on

மிழ் சினிமாவில் 1970ம் ஆண்டுகளில் அறிமுகமாகி பிரபலமாகப் பேசப்பட்டவர் நடிகை ஜெயசுதா. அந்தக் காலகட்டத்தில் முன்னணி இயக்குநராக இருந்த கே.பாலசந்தரால் இவர் அறிமுகப்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது திரைப்படங்களான அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஏராளமான திரைப்படங்களில் ஜெயசுதா நடித்து இருக்கிறார். திரைப்பட வாய்ப்பை இழந்தவர்களின் புகலிடமாக விளங்கும் அரசியல் மோகம் இவரையும் விட்டு வைக்காததால், கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதையடுத்து, 2016ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் ஜெயசுதா இணைந்தார். அதற்குப் பிறகு அந்தக் கட்சியில் இருந்தும் விலகி, 2019ம் ஆண்டு தேர்தலின்போது ஒய்எஸ்ஆர்சிபி (யுவஜன ஸ்ரமிகா ரித்து காங்கிரஸ் கட்சி) கட்சியில் சேர்ந்தார். ஆனாலும், அவர் அந்தக் கட்சியில் தீவிரமாக செயல்படவில்லை. அதுமட்டுமின்றி, சில தெலுங்கு படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவர் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்த நிலையில், நடிகையும் முன்னாள் எம்எல்ஏவுமான ஜெயசுதா தெலங்கானா பாஜக மாநில பொறுப்பாளரும் பொதுச்செயலாளருமான தருண் சுக் முன்னிலையில் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தன்னை அந்தக் கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவரும் மத்திய சுற்றுலா அமைச்சருமான ஜி.கிஷான் ரெட்டி, அக்கட்சியின் துணைத் தலைவர் டி.கே.அருணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com