

தமிழக வெற்றி கழக தலைவர் சி. ஜோசப் விஜய், கடந்த 10 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவருடன் கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்ற செங்கோட்டையன், தியாகராய நகர் தொகுதியில் வெற்றி பெற்ற என். ஆனந்த், வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ஆதவ் அர்ஜுனா, திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற சி.டி.ஆர். நிர்மல் குமார், எழும்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜ்மோகன், திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற அருண்ராஜ், மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கடரமணன், காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற பிரபு, சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
இந்நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சர்களுக்குரிய துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய்க்கு பொதுத்துறை, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் தொடர்பான துறைகள், காவல்துறை, உள்துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கிய துறைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
மேலும் த.வெ.க. அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது
=> ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
=> ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை
=> அருண் ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
=> கே.ஏ.செங்கோட்டையன் - நிதித்துறை
=> வெங்கட்ரமணன் - உணவுத்துறை
=> சி.டி.ஆர். நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை
=> ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை
=> டி.கே.பிரபு - கனிமவளத்துறை
=> கீர்த்தனா - தொழிற்துறை