

பெரும்பாலான மக்கள், தங்கள் கடுமையான உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்திற்கு பாதுகாப்பும் உறுதியான வருமானமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நம்பகமான முதலீட்டு வாய்ப்புகளைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள். இதன் விளைவாக, வங்கிகள் மற்றும் இந்திய அஞ்சலகங்கள் (Post Office) வழங்கும் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்திய அஞ்சலகங்கள் (Post Office) சாமானிய மக்களின் முதலீட்டுத் தேவைகளுக்காகவும், எதிர்காலப் பாதுகாப்புக்காகவும் மத்திய அரசின் உத்தரவாதத்துடன் பல்வேறு சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மற்றும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
போஸ்ட் ஆபீஸில் மாதாந்திர வருமானத் திட்டத்தை 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் ஆரம்பிக்கலாம். சேமிப்பு கணக்கு மற்றும் கூட்டுக் கணக்கு ஆரம்பிக்கும் வசதி உள்ளது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அரசு ஆதரவு திட்டத்தில், முதலீடு பாதுகாக்கப்படுகிறது மற்றும் முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான விகிதத்தில் வட்டி பெறுகிறார்.
போஸ்ட் ஆபீஸில் உள்ள சேமிப்பு திட்டங்களில் தொடர் வைப்பு அல்லது RD திட்டம் மிகவும் பிரபலமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். தற்போது, போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.7% ஆகும். இந்தத் திட்டத்தின் காலம் 60 மாதங்கள் ஆகும். அதாவது 5 ஆண்டுகள்.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.100 டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச டெபாசிட் வரம்பு எதுவும் இல்லை. அதாவது, ஒவ்வொரு மாதமும் நீங்கள் விரும்பும் அளவுக்குப் பணத்தை முதலீடு செய்யலாம்.
போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டு முடிவில், முதிர்வு காலத்தில் மொத்தமாக சுமார் ரூ.3,56,830 உங்களுக்கு கிடைக்கும்.
இதில், உங்களின் மொத்த முதலீட்டுத் தொகை 3,00,000 ரூபாயாக இருக்கும். உங்களுக்குக் கிடைக்கும் வட்டி சுமார் 56,830 ரூபாயாக இருக்கும். அதாவது, நீங்கள் 5 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் தவறாமல் 5,000 ரூபாய் டெபாசிட் செய்தால், நிச்சயமாக நல்ல வருமானத்தைப் பெறலாம்.
அதேபோல் RD திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டு முடிவில், முதிர்வு காலத்தில் நீங்கள் செலுத்தும் மொத்த முதலீடான ரூ.60,000-க்கு ரூ.11,000 வரை வட்டியாகக் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்ய இது சிறந்த வழியாகும். பெரும்பாலான வங்கிகளில் 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை RD திட்டங்கள் உள்ளன. அஞ்சலகத்தில் 5 ஆண்டுகள் மட்டுமே.