ம.பி.யில் கமல்நாத் எதிராக சுவரொட்டி காங்கிரஸ் - பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு!

ம.பி.யில் கமல்நாத் எதிராக சுவரொட்டி காங்கிரஸ் - பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

போபால் நகரின் மையப் பகுதியில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத்தை குறிவைத்து ஆட்சேபகரமான வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆட்சேபகரமான சுவரொட்டிகளை பா.ஜ.க.வினர்தான் ஒட்டியுள்ளதாகவும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸார் கோரியுள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக போலீஸில் புகார் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் பி.சி.சர்மா தலைமையில் ஒரு குழுவினர் போலீஸ் நிலையம் சென்றனர். எனினும் போலீஸார் வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் காங்கிரஸாரின் குற்றச்சாட்டுக்கு உள்துறை அமைச்சர் நவரோத்தம் மிஸ்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். கமல்நாத்துக்கு எதிராக ஆட்சேபகரமான சுவரொட்டி ஒட்டப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க.வினருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார். ஒருவேளை காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி கோஷ்டியினர் சதிவேலையா இது என்பதும் தெரியவில்லை.

கமல்நாத்துக்கு எதிரான சுவரொட்டிகள் தலைமைச் செயலக வளாகத்தில் வல்லப பவன் மற்று சத்புரா பவனிலும் மற்றும் வணிக வளாகங்களிலும் ஒட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பா.ஜ.க. மற்றும காங்கிரஸார் இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து சுவரொட்டியை ஓட்டியது யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com