#Breaking ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைப்பு! ஆர்.எஸ்.எஸ் தகவல்!

ஆர்எஸ்எஸ் அமைப்பு
ஆர்எஸ்எஸ் அமைப்பு
Updated on

தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்தத் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை வைத்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது எனக் கூறி அனுமதி தர மறுத்தது தமிழக அரசு. பின்னர் நவம்பர் 6ம் தேதி பேரணி நடத்தலாம் என கூறியது. அதிலும் நீதிமன்றத்தில், ஆர்.எஸ்.எஸ்கோரிக்கை வைத்த 50 இடங்களில், 3 இடங்களில் மட்டும் உயர் நீதி மன்றம் அனுமதித்தது.

பின்னர் இதனை ஆர்.எஸ்.எஸ் மறுத்ததையடுத்து, `கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், கன்னியாகுமரி' ஆகிய ஆறு இடங்களைத்தவிர்த்து, 44 இடங்களில் பேரணி நடத்தலாம் என நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

ஆர்.எஸ்.எஸ் பேரணி
ஆர்.எஸ்.எஸ் பேரணி

இந்த நிலையில் தற்போது, தமிழகம் முழுவதும் 44 இடங்களில் நாளை நடைபெறவிருந்த பேரணியை ஒத்திவைப்பதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து, ஆர்.எஸ்.எஸ் ``கடந்த மாதம் நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிமன்றம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காரணத்தினால் அணிவகுப்பை நவம்பர் 6ல் நடத்தக் கூறினார்கள். அதை ஏற்று நாங்கள் நவம்பர்6ம் தேதி அணிவகுப்பை நடத்த இருந்தோம். நேற்று வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ அல்லது நான்கு சுவர்களுக்கோ நடத்துமாறு நீதிமன்றம் கூறி இருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல.

காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொதுவெளியில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதனால் நவம்பர் 6ம் தேதி நடக்க இருந்த ஊர்வலத்தை நடத்த இயலாது அதனை பின்னர் ஒத்தி வைக்கிறோம் " எனக் கூறப்பட்டியிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com