கர்ப்பமான கார்கள்… யார் காரணம்? அச்சச்சோ! 

Pregnant cars in China
Pregnant cars in China
Published on

சமீப காலமாக சமூக ஊடகங்களில் சீனாவில் கார்கள் கர்ப்பமாகிவிட்டன என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இது உண்மையா? கார்கள் எப்படி கர்ப்பம் ஆகும்? வாருங்கள் அதற்கான காரணத்தைப் பார்க்கலாம். 

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்களில், சீனாவில்  தயாரிக்கப்பட்ட கார்கள், குறிப்பாக அவற்றின் முன் பகுதியில் வீங்கிய நிலையில் காணப்படுகின்றன. இது கார்கள் கர்ப்பமாகிவிட்டது போன்ற தோற்றத்தைத் தருகிறது. இந்தப் புகைப்படங்கள் பலரால் நகைச்சுவையாகவும், சிலரால் அதிர்ச்சியாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டன. 

உண்மை என்ன? உண்மையில் சீனாவில் கார்கள் கர்ப்பமாகிவிட்டன என்பது ஒரு வதந்தி. இந்த வீக்கத்திற்கான காரணம் கார்களில் பயன்படுத்தப்படும் பெயிண்ட்தான். சீனாவில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால், சில வகையான பெயிண்டுகள் வெயிலின் தாக்கத்தால் விரிவடைந்து இந்த வகையான வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது குறிப்பாக சீனாவில் தயாரிக்கப்படும் சிலவகை கார்களில் அதிகமாக காணப்படுகிறது. 

சீனாவில் நிலவும் கடுமையான வெப்பம் கார்களின் பெயிண்ட் மட்டுமல்லாமல், பிற பாகங்களையும் பாதிக்கிறது. இதனால், கார்களின் செயல்பாட்டில் குறைபாடுகள் ஏற்படுகிறது. மேலும், வெப்பத்தின் தாக்கத்தால் கார்களின் உட்புறம் சூடாகி பயணிகளுக்கு அசௌகரியத்தையும் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
ஸ்நோர்கெலிங் செய்வதால் ஏற்படும் உடல், மன, சமூக நன்மைகள் தெரியுமா?
Pregnant cars in China

இதுபோன்ற தகவல்களை சமூக வலைதளங்கள் வேகமாக பரப்புகின்றன. நீங்கள் இணையத்தில் பார்க்கும் எல்லா தகவல்களும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில் தவறான தகவல்கள் வேகமாகப் பரவி வதந்திகளை உருவாக்குகின்றன. எனவே, சமூக ஊடகங்களில் ஒரு தகவலை பகிர்வதற்கு முன் அதன் உண்மை தன்மையை ஒருவர் கட்டாயம் சரிபார்க்க வேண்டும். 

காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் வெப்பநிலை உயர்வு, நம் வாழ்வில் பல்வேறு அம்சங்களை பாதிக்கிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. எனவே, சீனாவில் கார்கள் கர்ப்பமானதற்கு யாரும் காரணமல்ல நம்ம தலைவர் சூரியன்தான். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com