மேடையில் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா..!

premalatha vijaykanth
premalatha vijaykanthsource:ANI
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

"தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம்" என்று முதலமைச்சர் மு க ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே கூட்டணிக் கட்சியான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியது தொண்டர்களிடையே அதிர்ச்சியைத் தந்துள்ளது.

சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலரும் மேடையில் இருக்க "தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை போதை கலாச்சாரம் எனும் ஒரு குற்றச்சாட்டு மட்டுமே மு.க ஸ்டாலின் அரசு மீது உள்ளது .

நான் சொல்றேன் இன்றைக்கு ஒரு சகோதரியாக இந்த கூட்டணியில் அண்ணனுக்கு வலது கரமாக இணைத்திருக்கிறேன். அப்படி எங்காவது ஒரு பெண்ணுக்கு ஏதாவது என்றால் நான் அண்ணன் மு.க ஸ்டாலினிடம் நேரடியாக பேசி சரி செய்வேன். இனி எல்லா இடத்திலும் சிசிடிவி மற்றும் பெண்களுக்கான அனைத்து பாதுகாப்புகளையும் அண்ணன் தருவார் என இந்த மேடையில் உறுதியாக கூறுகிறேன். ஒரு பெண் நடு இரவில் தனியாக செல்லும் நாள் எப்போது வருகிறதோ அதுதான் சுதந்திரம் பெற்றதற்கு அர்த்தம் என்றார் காந்தி. அது விரைவில் அண்ணன் ஆட்சியில் நடக்கும் . என்று திமுகவை உயர்த்தி பேசினார்

முன்னதாக பிரேமலதா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை "பெண் இனத்தின் பாதுகாவலர்" மற்றும் "பெண் இனத்தை உயர்த்தப்போகும் சிறந்த தலைமகன்" எனப் புகழ்ந்து அவர் செய்த பெண்கள் நலத்திட்டங்களை குறிப்பிட்டு பேசினார். மேலும் பெண்களுக்கு சொத்தில் வேலைவாய்ப்பில் என அனைத்திலும் சம உரிமை பெற்றுத் தந்தவர் ஸ்டாலின் என புகழாரம் சூட்டி சேலத்தில் அதிகளவில் கூடியிருந்த பெண்களிடையே கரகோஷம் பெற்றார்.

எனினும் ஸ்டாலினும் மேடையில் இருக்கும் போது இப்படி பிரேமலதா பேசியது ஒருவிதத்தில் சரி என்றும் , சரியல்ல என்ற விவாதங்கள் பரவிவருகிறது.

இதையும் படியுங்கள்:
தொகுதி மறுவரையறை குறித்து ராகுல் காந்தியுடன் மு.க.ஸ்டாலின் பேச்சு..!
premalatha vijaykanth
logo
Kalki Online
kalkionline.com