

அமெரிக்கா – ஈரான் போரின் எதிரொலியாக இந்தியாவில் எரிபொருள் விலையேற்றம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஈரான் போரினால் நாடு முழுக்க சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது பிரிமியம் பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட உள்ளது. இந்திய எரிபொருள் சந்தையில் முக்கியமான மாற்றமாக இது உள்ளது. சமீபத்திய சில வருடங்களாக இந்தியாவில் பெட்ரோல் விலை நிலையாக இருந்ததை தொடர்ந்து , தற்போது மாற்றங்கள் தொடங்கிவிட்டன. இந்த மாற்றங்களுக்கு அமெரிக்கா ஈரான் போர் முக்கிய காரணமாக இருக்கின்றது.
கச்சா எண்ணெய் கப்பல்கள் , போர் நடந்து வரும் ஈரான் நாட்டு கடல் எல்லையை கடந்து தான் இந்தியாவிற்கு வர வேண்டும். இந்திய கப்பல்களுக்கு ஈரான் கடல் வழியில் பயணம் செய்ய அந்த நாடு அனுமதித்தாலும் , சர்வதேச அளவில் பல முரண்பாடுகள் உள்ளன. உலக அளவில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டினால் , சர்வதேச சந்தையில் அதன் விலையும் உயர்ந்துள்ளது. சமீபத்திய செய்திகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், ஒரு லிட்டர் பிரிமியம் பெட்ரோலின் விலை 2 ரூபாய் முதல் ரூ. 2.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்த செய்தியில் ஒரு மகிழ்ச்சிகரமாக விஷயம் என்னவென்றால் , இந்த விலை உயர்வு சாதாரணமான பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக செயல்திறன் கொண்ட என்ஜின்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஹை ஆக்டேன் (High-Octane) எரிபொருட்களே இந்த விலை உயர்வைச் சந்தித்துள்ளன.
தற்போது சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் XP 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு சுமார் ₹103.80 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோலின் விலை ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தவாறு, சில பைசாக்கள் உயர்வாகவும் குறைவாகவும் இருக்கும். தற்போது இந்த பெட்ரோலின் விலையில் ₹2 முதல் ₹2.50 காசுகள் வரை விலை உயர உள்ளது.
இந்த இந்த விலையேற்றத்திற்கு சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையும் , அமெரிக்க ஈரான் போரினால் , பாதிக்கப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்துகள் , தாக்குதலுக்கு ஆளான எண்ணெய் கிணறுகள் , கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டது முக்கிய காரணங்களாக உள்ளன.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 100 டாலர் என்ற அளவைத் தாண்டி விட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருவதால் , இறக்குமதிக்கு கூடுதல் செலவுகள் ஆகியுள்ளன. அதை ஈடுகட்டும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளனர்.
அதே நேரம் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. எண்ணெய் நிறுவனங்கள் பிரீமியம் ரகங்களின் விலையை மட்டும் உயர்த்தி உள்ளன. இந்த விலையேற்றம் சாதாரண மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. விலை உயர்ந்ந்த உயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் அதிநவீன ஸ்போர்ட்ஸ் பைக்குகள் வைத்திருப்பவர்களுக்கே சிறிய பாதிப்பு இருக்கும்.