ஜார்கண்ட் 3 நாள் பயணமாக சென்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு!

ஜார்கண்ட்  3 நாள் பயணமாக சென்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு!
Published on

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று ஜார்கண்ட் சென்றுள்ளார். ராஞ்சியில் புதிய உயர்நீதிமன்ற கட்டிட திறப்பு விழா, பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.அத்துடன் ராஞ்சி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவிலும் மாலையில் பங்கேற்கிறார்.

ஜார்கண்ட் சென்று விமான நிலையத்தில் சென்று இறங்கிய அவரை மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டது.ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

பின்னர் அவர் அங்குள்ள பாபா பைத்யநாதர் கோவிலுக்கு சென்றார். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இந்த புகழ்பெற்ற கோவிலில், வேத மந்திரங்கள் முழங்க முர்மு சிறப்பு வழிபாடு நடத்தினார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் வாரியம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் முக்கியமாக தலைநகர் ராஞ்சியில் நேற்று மாலையில் ஐகோர்ட்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். ரூ.550 கோடியில் 165 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த ஐகோர்ட்டு வளாகம் நாட்டின் மிகப்பெரிய ஐகோர்ட்டு வளாகங்களில் ஒன்றாகும்.

இதற்காக தியோகரில் இருந்து ராஞ்சி சென்றடைந்த திரவுபதி முர்முவை, அங்குள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில், மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து பிர்சா சவுக் சென்ற ஜனாதிபதி, அங்கு பழங்குடியின தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் தியாகி ஆல்பர்ட் எக்காவுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com