லண்டன் ராணியின் இறுதிசடங்கில்  குடியரசு தலைவர் திரௌபதி மர்மு

லண்டன் ராணியின் இறுதிசடங்கில் குடியரசு தலைவர் திரௌபதி மர்மு

Published on

பிரிட்டனின்  ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பாக கலந்து கொள்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி மர்மு. அதற்காக அவர் இங்கிலாந்து செல்கிறார்.

இங்கிலாந்து ராணியின் இறுதி சடங்கில் உலக தலைவர்கள் பலரும்  கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதனால்  வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை மன்னர் சார்லஸ் நேரிடையாக கவனித்து வருகிறார்.

பிரிட்டனில் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அஞ்சலி செலுத்த அதிக அளவில் கூடிய பொதுமக்கள் கூட்டத்தில் நேரில் சென்று தனது நன்றியினை தெரிவித்தார் மன்னர் சார்லஸ்.

logo
Kalki Online
kalkionline.com