ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் பல மாதங்களாக தீவிரமாக நடந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி, தனது முதல் வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார்.
அதற்கு முன்னதாக அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, தனது நாடு ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடையாது என்றும், ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்க காங்கிரஸ் உக்ரைனுக்கு உதவுதற்கு நன்றி என்றும் தெரிவித்தார். அமெரிக்காவின் ஆதரவு உலகளாவிய பாதுகாப்பிற்கான முதலீடு என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் அமெரிக்காவுக்கு நேரில் சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்த விவகாரம், சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.