நாட்டில் தேசிய மருந்துகள் விலைக் கொள்கையால் பாராசிடமால் உள்ளிட்ட 127 மருந்துகளின் விலை குறைக்கப் பட்டுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:
நாட்டில் ஜூரம் மற்றும் சளி தொல்லைக்கு நிவாரணமாக பயன்படும் பாரசிட்டமால், மற்றும் அமாக்ஸிசிலின் 127 மருந்துகளில் விலை குறைக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் பாராசிடமால் (650 எம்ஜி) மாத்திரை தற்போது ஒரு மாத்திரை ரூ.2.3 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் போது ஒரு மாத்திரை விலை ரூ.1.8 காசுகளாக இருக்கும்.
இதுபோல, தொற்று நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளின் விலையும் கணிசமாகக் குறைக்கப் பட்டுள்ளது. அதேவேளையில், இரண்டாம் வகை நீரிழிவுக்கு கொடுக்கப்படும் மெட்ஃபார்மின் (500 எம்ஜி) மாத்திரை விலை ஒன்று ரூ.1.7 காசுகளாக இருந்த நிலையில், ரூ.1.8 காசுகளாக உயர்த்தப் பட்டுள்ளது. மெட்ஃபார்மின் கூட்டு கலவையான மாத்திரைகளின் விலை கடந்த ஓராண்டில் மட்டும் பல முறை மாற்றியமைக்கப் பட்டுள்ளது.
பாராசிடமால் உள்ளிட்ட மாத்திரைகளின் விலை குறைந்திருப்பது ஒரு பக்கம் வரவேற்கப் பட்டாலும், ஏராளமான முதியவர்கள் பயன்படுத்தும் நீரிழிவுக்கான மாத்திரை உள்ளிட்ட சில மாத்திரைகளின் விலைகள் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.