பாலியல் புகாரில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு ஏப்ரல் 3ம் வரை சிறை தண்டனை!

பாலியல் புகாரில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு ஏப்ரல் 3ம்  வரை சிறை தண்டனை!
Published on

பாலியல் புகாரில் கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு ஏப்ரல் 3 வரை நீதிமன்ற காவலில் வைக்க நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பாதிரியர் பெனடிக்ட் ஆன்றோவை இன்று கைது செய்யப்பட்ட நிலையில் 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (29). இவர் குமரி மாவட்டத்தின் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராகப் பணியாற்றி உள்ளார். கடந்த சில நாட்களாக இவரின் ஆபாச வீடியோக்கள், வாட்ஸ்-அப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவின. சில பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை போன்று வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டியதாகவும், சில பெண்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். இதையடுத்து, பாதிரியாரை பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவின்பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தலைமறையாக இருந்து வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடி வந்தனர் அவரது செல்போன் தொடர்புகளை அவர்கள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நாகர்கோவில் பால் பண்ணை பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

காலை 8.30 மணி முதல் இரவு 7. 30 மணி வரையிலும் அவரிடம் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் ஆசாரிப்பள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை அழைத்துச் சென்று உடல் பரிசோதனை அறிக்கை பெற்றனர். அதன் பின்னர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் நாகர்கோவில் மாஜிஸ்திரேட் 2 வது எண் வீட்டில் இன்று இரவு ஆஜர் படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைப்பதற்கு மாஜிஸ்ட்ரேட் தாயுமானவன் உத்தரவிட்டார் அதனைத் தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ சிறையில் அடைக்கப்பட்டார்.

15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி தாயுமானவன் உத்தரவிட்டு உள்ளதால் ஏப்ரல் 3ம் தேதி வரை பாதிரியாருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com