திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிரதமர் மோடி..!

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிரதமர் மோடி..!

திருப்பதி ஏழுமலையானை பிரதமர் மோடி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பதியில் தரிசனம் செய்ததை முன்னிட்டு விஐபி தரிசனம் ரத்து செயப்பட்டது. தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் வியாழக் கிழமை (நவம்பர் 30) தேர்தல் நடைபெறுகிறது.

இதனால் பிரதமர் மோடியும் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு மக்களிடம் வாக்கு திரட்டினார். அதைத் தொடர்ந்து நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திரா சென்றார். ரேணிகுண்டா விமான நிலையம் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் அப்துல் நசீர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருமலைக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுத்தார். தொடர்ந்து இன்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வழிபாடு செய்தார். காலை 8 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அவரை, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க, தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்,

திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சாமி கோவிலில், 140 கோடி இந்தியர்களின் நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com