நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இதையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

திண்டுக்கல், சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பவளவிழா மற்றும் 36-வது பட்டமளிப்பு விழா நாளை (நவம்பர்11_ நடைபெற்வுள்ளது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். 

இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.  விழாவிற்கு காந்தி கிராம பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். துணைவேந்தர் குர்மித்சிங் வரவேற்று பேசுகிறார்.

இந்த பட்டமளிப்பு விழாவுக்காக நாளை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரிலிருந்து மாலை 3 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் அருகே உள்ள அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு இறங்கு தளத்துக்கு மாலை 4 மணியளவில் வந்து இறங்குகிறார். 

காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் நாளை வரை மதுரை விமான நிலைய உள்வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com