அமெரிக்க பாராளுமன்ற கூட்டத்தில் 2-வது முறையாக பேச உள்ளார் பிரதமர் மோடி!

அமெரிக்க பாராளுமன்ற கூட்டத்தில் 2-வது முறையாக பேச உள்ளார் பிரதமர் மோடி!
Published on

அமெரிக்க அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி 2-வது முறையாக பேச உள்ளார் . மேலும் ராணுவம், வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று ஜோ பைடனுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இதில் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்கள் முக்கியத்துவம் பெறும். தொழில், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம், தொலைத்தொடர்பு, விண்வெளி உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது. இருநாட்டு நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமைய உள்ளது. இந்த சந்திப்பின்போது பொருளாதாரம், பாதுகாப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி, இருநாட்டு வணிகம் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப் பட உள்ளது.

மேலும் ராணுவம், வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. அமெரிக்க நாட்டின் ஜெனரல் எலக்ட்ரிக் (ஜிஇ) நிறுவனத்துடன் ஜெட் விமான என்ஜின்கள் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நடந்தால் இந்தியாவின் ஆயுதத்துறையில் ஒரு புதிய சகாப்தம் ஏற்படும்என்கிறார்கள்.

இந்திய பிரதமராக மோடி கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறையாக உரையாற்றினார். அதன்பின் தற்போது 2-வது முறையாக அவர் அமெரிக்காவில உரையாற்ற உள்ளார்.

இரவு அமெரிக்க அரசு சார்பில் அதிபர் ஜோ பைடன் அளிக்கும் இரவு விருந்தில் கலந்துகொள்கிறார். 23-ம் தேதி அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசுகிறார். பின்னர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கிறார். பிறகு அமெரிக்காவின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார். 23-ம் தேதி இரவு இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். 2 மணி நேரம் நடைபெறும் இக்கூட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 இந்திய வம்சாவளியினர் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com