பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்  உடல்நலக் குறைவு காரணமாக, குஜராத் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி விரைவில் குஜராத் சென்று தனது தாயாரை சந்திப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. 

பிரதமரின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 

முன்னதாக, குஜராத் சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார். மேலும்  குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து வாக்களித்து சென்றது குறிப்பிடத் தக்கது. 

இந்நிலையில், நேற்று மைசூரில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி காயமடைந்தனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com