Modi mother
Modi mother

பிரதமர் மோடியின் தாயார் இயற்கை எய்தினார் ! தலைவர்கள் இரங்கல்!

Published on

குஜராத் அகமதாபாத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். பிரதமர் மோடி அவரது தாயாரின் மறைவையடுத்து அவசர அவசரமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றார். இந்த தகவலை நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில் “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது” என்று பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:

மு.க.ஸ்டாலின் இரங்கல் பதிவில் உங்கள் அன்புக்குரிய தாயார் ஹீராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சி பூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயின் இழப்பை யாராலும் தாங்க முடியாது. உங்கள் இழப்புக்காக நான் மிகவும் வருந்துகிறேன். என்னுடைய வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்று பதிவிட்டுள்ளார்.

Modi and mother
Modi and mother

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை:

அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவிற்கு பாஜக தமிழ்நாடு சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம். இந்த கடினமான நேரத்தில் நம் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நமது பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com