பிரதமர் மோடி இன்று கேரளா வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த பட்டுள்ளது!

 பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பிரதமர் மோடி இன்று வந்தே பாரத் ரயில் உட்பட பல திட்டங்களை துவக்கி வைக்க கேரளா வருகிறார் . அவரது கேரளாவுக்கு வருகையை தொடர்ந்து 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சென்டிரல் ஸ்டேடியத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நாளை வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார். கேரளாவில் முதன் முறையாக திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு 1.8 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் ரோட் ஷோவில் கலந்து கொள்ளும் அவர் பாஜக இளைஞர் பாசறை மாநாடு, கிறிஸ்தவ மத போதகர்களை சந்திக்கிறார்.

இரவு தாஜ்மலபார் ஹோட்டலில் தங்கும் அவர் நாளை காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வந்து வந்தே பாரத் ரயில் திட்டம் உட்பட கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டம் உட்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

பின்னர் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். கேரளாவில் முதன் முறையாக திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி பயணத்தின் போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் கடிதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள பாஜக அலுவலகத்திற்கு வந்தது. மேலும் பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய 49 பக்கமும் சமூக வலைதளத்தில் கசிந்த சம்பவமும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மற்றும் அவருடைய பாதுகாப்பு விவரம் கசிந்ததை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே மோடி நிகழ்ச்சி நடைபெறும் கொச்சியில் 2 ஆயிரம் போலீசாரும், திருவனந்தபுரத்தில் 3 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பிரதமர் வருகையை ஒட்டி இன்று மதியம் முதல் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சி நடக்கும் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையம், சென்டிரல் ஸ்டேடியம் ஆகியவை தற்போது முழுக்க முழுக்க சிறப்பு பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவையொட்டி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வரும் ரெயில்கள் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வராது. இந்த ரெயில்கள் கொச்சுவேளி, நெய்யாற்றின்கரை, நேமம், கழக்கூட்டம் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்லும்.

logo
Kalki Online
kalkionline.com