மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நாட்டின் 6-வது வந்தே பாரத் ரயிலை நேற்று பிரதமர் மோடி நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே தொடங்கி வைத்தார். அப்போது டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி, ரயிலில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்தியாவில் ஏற்கனவே  5 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வரும் சூழலில், 6 -வது வந்தே பாரத் ரயிலை நாக்பூர்-பிளாஸ்பூர் இடையே நேற்று துவக்கப் பட்டது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி நேரில் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அத்துடன் அந்த மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து அவர் பயணித்தார். இதனையடுத்து நாக்பூரில் மிகான் பகுதியில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, அங்கு  சம்ருத்தி நெடுஞ்சாலை திட்டத்தின் முதல் கட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கோவாவில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்ட மோபா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ப்பு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் கருத்துப்படி இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது.

இந்த மொபா சர்வதேச விமான நிலையத்திற்கு, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார் என்பதும் தற்போது இந்த விமான நிலையம் ரூ.2,870 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com