பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடி - உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

Published on

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழா நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.. அதன் பின்னர் பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்த சந்திப்பிற்கு பின் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றார்.

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழா நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதை தொடர்ந்து திமுக அலுவலகத்திற்கு செல்ல உள்ளார். அங்கே இருக்கும் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.

அதன் பிறகு பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார். பிரதமரை சந்திக்க அவருக்கு நாளை காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மேலும், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி அவர்களை உதயநிதி ஸ்டாலின் சந்தித்த பிறகு அது குறித்த தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com