புலிகள் எண்ணிக்கை பட்டியல் வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

புலிகள் எண்ணிக்கை பட்டியல் வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

2022ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 3,167 புலிகள் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டு நிறைவடைந்ததையடுத்து, 2022ஆம் ஆண்டுக்கான புலிகள் எண்ணிக்கையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, கர்நாடக மாநிலம் மைசூரில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு 2022ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.

இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 6.7% அதிகரித்து தற்போது இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு 2,967ஆக இருந்தது.

அதன்படி 2006ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் ஆயிரத்து 411 புலிகள் இருந்த நிலையில், 2010ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 1,706 ஆக அதிகரித்தது. 2014ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 226ஆக அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை, 2018ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 967 ஆக உயர்ந்தது.

ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வந்த புலிகளின் எண்ணிக்கை, 2022ம் ஆண்டில் 3 ஆயிரத்து 167 ஆக அதிகரித்தது கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. 2014ம் ஆண்டு முதல் 2022 வரையிலான 8 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 941 ஆகவும், 2018 முதல் 2022 வரையிலான 4 ஆண்டுகளில் 200 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் காடுகளில் வாழ்ந்த புலிகளை பாதுக்காக்க, 9 புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டன. கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயம், உத்தரகண்டில் உள்ள கார்பெட் தேசியப் பூங்கா என 18 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 9 புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டது.

இத்திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது இந்தியா முழுவதும் 54 புலிகள் காப்பகம் உள்ளன. புலிகள் வாழும் காட்டின் பரப்பளவு 18 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் இருந்து 75,000 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. இது மொத்த இந்திய பரப்பளவில் 2.4% என இத்திடத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் வெளியிட்ட மலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com