பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகை 5 அடுக்கு பாதுகாப்பு!

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Published on

பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதை முன்னிட்டு, ரயில், விமானம், பேருந்து நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னைக்கு பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி நாளை வரும் நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். பிரதமர் மோடியின் இந்த வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை சார்பாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருவதையொட்டி நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்து வருவதாக ரயில்வே போலீஸாரும் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில், புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை சென்னைக்கு வருகிறார்.

மாலை 3 மணியளவில் சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை திறந்துவைக்கிறார். பின்னர், மாலை 4 மணியளவில் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில், சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

அதேபோல், சென்னை கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம் செங்கோட்டை இடையே வாரம் 3 முறை விரைவு ரயில் சேவை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதேபோல , திருத்துறைப்பூண்டி அகஸ்தியம் பள்ளி அகலப்பாதையை துவக்கி வைக்க உள்ளார்.

மேலும், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள், ஆர்பிஎஃப் அதிகாரிகள் மற்றும் தமிழக டிஜிபி ஆய்வு மேற்கொண்டனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது, அருகில் உள்ள கட்டிடத்தில் போலீஸார் பாதுகாப்பு, 11-வது நடைமேடையில் நிகழ்ச்சி நடத்துவது ஆகியவை தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும், முக்கிய வழித்தடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை முழுவதும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com