போன் ஹேக்கிங் வழக்கில் மிகப்பெரிய தொகையை இழப்பீடாகப் பெறும் பிரின்ஸ் வில்லியம்!

போன் ஹேக்கிங் வழக்கில் மிகப்பெரிய தொகையை இழப்பீடாகப் பெறும் பிரின்ஸ் வில்லியம்!

பிரிட்டிஷ் சிம்மாசனத்தின் அதிகாரப்பூர்வ அடுத்த வாரிசான இளவரசர் வில்லியம், 2020ல் ரூபர்ட் முர்டோக்கின் மீடியா எம்பையர் கீழ் இயங்கும் பிரிட்டிஷ் செய்தித்தாள் பிரிவு ஒன்றின் மீது தொடுத்த போன் ஹேக்கிங் வழக்கு ஒன்றில் இழப்பீடாக "மிகப் பெரிய தொகையைப்” பெற்றார் என்று அவரது சகோதரரான ஹாரி தொடர்பான வழக்கு ஒன்றில் செவ்வாயன்று ஒளிபரப்பப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தி சன் மற்றும் இப்போது செயல்பாட்டில் இல்லாத நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் வெளியீட்டாளர்களுக்கு எதிராக இளவரசர் ஹாரியின் வழக்கை ஏன் தூக்கி எறியக்கூடாது என்பது பற்றிய வாதங்களின் சுருக்கத்தில் இளவரசர் ஹாரியின் வழக்கறிஞர் இந்த தகவலை வெளிப்படுத்தினார். இரண்டு தசாப்தங்களுக்கு முந்தைய அந்த ஊழலில் செய்தித்தாள்கள் =, பிரிட்டிஷ் அரச வாரிசுகளுக்கு எதிராக சட்டவிரோதமாக தகவல்களை சேகரித்ததாக அவ்வழக்கு குற்றம் சாட்டியுள்ளது.

முர்டோக்கிற்கு சொந்தமான நியூஸ் குரூப் நியூஸ்பேப்பர்ஸ் எனும் ஊடக நிறுவனத்தரப்பு, இளவரசர் ஹாரி மற்றும் நடிகர் ஹக் கிரான்ட் ஆகியோரின் தொலைபேசி ஹேக்கிங் வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி பொருட்படுத்தாமல்ல் தூக்கி எறிய வேண்டும் என்று வாதிட்டது, ஏனெனில் இளவரசர் மற்றும் நடிகரின் கோரிக்கைகள் மிகவும் தாமதமாக கொண்டு வரப்பட்டன என்று அவர்கள் வாதிட்டனர்.

ஆனால், இளவரசர் ஹாரி தரப்பு வாதத்தில், “அரச குடும்பத்துக்கும் செய்தித்தாள்களுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டதால், அவர் தனது வழக்கைக் கொண்டுவருவதைத் தடுத்ததாக சசெக்ஸ் டியூக் ஆன ஹாரி கூறினார். இளவரசர் கூறிய இந்த ஒப்பந்தம், மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியால் அங்கீகரிக்கப்பட்டது, அந்த ஒப்பந்தமானது இந்த விவகாரம் தொடர்பாக அரச குடும்பத்திடமிருந்து எழக்கூடிய எதிர்கால வழக்குகளைத் தடுக்கும். என ஹாரி குறிப்பிட்டிருந்தார்.

ஹாரி 2017 இல் ஒரு தீர்மானத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார், அத்துடன் அவர் 2019 இல் அது தொடர்பாக வழக்கும் தொடர்ந்தார்.

ஆனால், அதற்கிடையில் வெளியீட்டாளருக்கும், பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கும் இடையே நடந்த ஒரு ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேல்ஸ் இளவரசர் வில்லியமுக்கு, வெளியில் தெரியாமல், மிகப்பெரிய தொகையை இழப்பீடாகக் கொடுத்து அந்த வழக்கை செட்டில் செய்ததாக அந்த ஆவணங்கள் தெரிவித்தன.

"நியூஸ் பேப்பர்ஸ் நியூஸ் குரூப்பானது (NGN) ஹாரியின் உரிமைகோரல்களை விசாரணைக்கு கொண்டு வருவதைத் தடுக்கும் இந்த முயற்சிக்கு பதிலளிக்கும் விதமாக, (ஹாரி) இந்த ரகசிய ஒப்பந்தத்தின் விவரங்களையும், அவரது சகோதரர்(இளவரசர் வில்லியம்) பெற்ற மிகப்பெரிய இழப்பீடு குறித்த உண்மைகளையும் பகிரங்கப்படுத்த வேண்டியிருந்தது என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். மதிப்பிற்குரிய ஹிஸ் ஹைனஸ் இளவரசர் வில்லியம், சமீபத்தில் NGN க்கு எதிரான தனது கோரிக்கையை திரைக்குப் பின்னால் தீர்த்துவிட்டார்" என்று வழக்கறிஞர் டேவிட் ஷெர்போர்ன் எழுதினார். "இது NGN தாக்குதலுக்கு எதிராக ஹாரிக்கு 'கவசமாக அல்ல வாளாக' பயன்படுத்தப்படுகிறது."

இரண்டு தொலைபேசி ஹேக்கிங் வழக்குகள் உட்பட, பிரிட்டிஷ் செய்தித்தாள்களுக்கு எதிராக ஹாரி கொண்டு வந்த பல வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com