இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவினுடைய நீண்ட நாள் கனவு திட்டமான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சி 2025 ஆம் ஆண்டு சாத்தியமாக உள்ளது. இந்தத் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்ல பெண் விஞ்ஞானிகளுக்கு முன்னுரிமை அளிக்க சாத்தியம் உள்ளது என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்து இருப்பது, இந்தியாவினுடைய நீண்ட நாள் கனவு திட்டமான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியின் முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. தற்போது நடத்தி முடிக்கப்பட்ட ககன்யான் சோதனை முயற்சியில் திட்டமிட்டபடி இலக்கை அடைந்த ராக்கெட், பிறகு ஆளில்லா கலனை தனியாக பிரித்தது, பிறகு பேராஷூட் உதவியுடன் நடுக்கடலில் இறங்கி ஆளில்லா கலன் இந்திய கப்பல் படையினரால் மீட்கப்பட்டிருக்கிறது. 2
025 ஆம் ஆண்டு ககன்யான் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சி நடத்த தொடர் சோதனை முயற்சிகள் நடைபெறும். அடுத்த சோதனை முயற்சியின் போது பெண் உருவ ஆண்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ் ரோபோ விண்வெளிக்கு அனுப்பி சோதிக்கப்பட உள்ளது.
போர் விமானங்களை இயக்கக்கூடிய பெண் பயிற்சியாளர்கள், பெண் விஞ்ஞானிகளை ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணுக்கு அனுப்ப அதிக வாய்ப்பு உள்ளது. பெண்களை விண்வெளிக்கு அனுப்ப முன்னுரிமை வழங்கி அதற்கான பணிகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
விமானங்களை பரிசோதிக்கும் பெண் விமானிகள் இல்லாததால் வருங்காலத்தில் அதற்கான வாய்ப்பு ஏற்படும். அதே சமயம் 2025-ல் இயக்கப்பட இருக்கும் ககன்யா திட்டத்தில் பெண் விஞ்ஞானிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ககன்யான் திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையில் முக்கிய மைல்கல்லாக மாறி இருக்கிறது. விரைவில் அதை சாத்தியப்படுத்தி காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.