மகளிர் இலவச பேருந்து பயணத்திற்கு எதிர்ப்பு:இது தமிழ்நாடு அல்ல, கர்நாடகா!
hp

மகளிர் இலவச பேருந்து பயணத்திற்கு எதிர்ப்பு:இது தமிழ்நாடு அல்ல, கர்நாடகா!

Published on

ர்நாடகாவில் மகளிருக்கான இலவச பஸ் பயண திட்டத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக  ஆட்டோ, கார், தனியார் பேருந்து உள்ளிட்ட 23  தனியார் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்திருக்கின்றன. மகளிருக்கான இலவச பேருந்தை அனைத்து இடங்களிலும் அனுமதிக்கக்கூடாது என்று கோரி  வரும் 27 ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மகளிருக்கான இலவச பேருந்து பயணம் போல், கர்நாடகாவில் சக்தி யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இதன் மூலம் 41 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் அனைத்து மகளிரும் பயணம் செய்ய முடியும் . ஆனால், கர்நாடகாவில் அங்கேயே பிறந்து வளர்ந்த பெண்களாக இருக்க வேண்டும். பயனாளிகள் இதற்கென்று செயல்படும் சேவா சிந்து வலைத்தளத்தில் பதிவு செய்து, ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

சென்ற மாதம் அமலுக்கு வந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால், தனியார் வாகன சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இலவச பஸ் பயணத்தால் தனியார் பேருந்துகள், ஆட்டோ, கார் மூலம் கிடைக்கும் வருவாய் பெருமளவு குறைந்திருப்பதாக பேசப்படுகிறது. பாதிக்கப்பட்ட தனியார் வாகன உரிமையாளர்கள் நிவாரணம் தரவேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.

கர்நாடக அரசின் இலவச திட்டத்தால் வாகன கடனை அடைக்க முடியவில்லை. வாகனத்திற்கான காப்பீடு செலுத்த முடியவில்லை என்று  தனியார் வாகன உரிமையாளர்களின் புகார் பட்டியல் நீளுகிறது.  தமிழகத்தில் ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளாக இலவச மகளிர் பேருந்து நடைமுறையில் உள்ளது. இது போன்ற எதிர்ப்புகள் தமிழ்நாட்டில் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

logo
Kalki Online
kalkionline.com