கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெறும் புதிய அரசு பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே பதவியேற்க உள்ளார்.
முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் நிலையில் துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்க உள்ளார்.
கர்நாடகா அமைச்சரவையில் புதிய மந்திரிகளாக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய மந்திரி கே.எச். முனியப்பா, முன்னாள் மந்திரிகள் எம்.பி. பட்டீல், கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டவர்கள் பதவியேற்றனர். இதில் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ஆவார். இவர்கள் 8 பேரும் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.
மேலும் இவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பதவியேற்பு விழா இன்று மாலை பெங்களூருவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அவரும் இன்று பதவியேற்க உள்ளார். முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, மந்திரிகள் பதவியேற்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது.
பிரியங்க் கார்கே தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் கலபுரகி மாவட்டம் சித்தராபூர் தொகுதியில் தற்போது வெற்றி பெற்றார். சித்தராபூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் 2013 தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக இருந்தார். இன்று பதவி ஏற்ற மந்திரி சபையில் இவர் மிகவும் குறைந்த வயது மந்திரி என்பது குறிப்பிடத் தக்கது.