பிரியங்கா காந்தி தொடங்கப் போகிறார் மகிளா மார்ச்!

பிரியங்கா காந்தி தொடங்கப் போகிறார் மகிளா மார்ச்!
Published on

காங்கிரஸ் எம்.பி- யான ராகுல் காந்தி நாட்டு ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்ததாக பிரியங்கா காந்தி தலைமையில் மாநில தலைநகரங்களில்  மகிளா மார்ச் என்ற பெயரில் மகளிர் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கி.மீ தூரத்துக்கு பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பயண்த்தில், இன்று 89-வது நாளாக ராஜஸ்தானில் ராகுல்காந்தி நடக்கிறார்.

இந்நிலையில், அடுத்ததாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் மாநில தலைநகரங்களில் 2 மாதம் மகளிர் பேரணியை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி எம்.பி-யான  கே.சி.வேணுகோபால் தெரிவித்ததாவது:

வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் எங்களது கட்சி சார்பில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் மகிளா மார்ச் என்ற பெயரில் மகளிர் பேரணி நடத்தப்படும்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடையும்போது, அதன் தொடர்ச்சியாக, பிரியங்கா காந்தியின் மகளிர் பேரணி தொடங்கி நடைபெறும் என தெரிவித்தார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com