கோவில்களில் செல்போன் பயன்படுத்த உடனே தடை விதிக்க, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கீழ்கண்டவை களும் தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை கோயிலில் செல்போன் பயன்படுத்தினால் அதை பறிமுதல் செய்து மீண்டும் பயன்படுத்தியவர்களிடம் அதனை ஒப்படைக்கக் கூடாது.
ஜீன்ஸ்,லெக்கின்ஸ் போன்ற உடை அணிந்து கோயிலுக்கு வருவதை ஏற்க முடியவில்லை
கோயில்கள் சுற்றுலாதலங்கள் அல்ல; கோயிலுக்கு வருவோர் நாகரீகமான உடைகளை அணிந்து வரவேண்டும்
டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடை அணிந்து கோயிலுக்கு வருவதை ஏற்க முடியவில்லை
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது.
இனி திருப்பதியில் வாசலில் புகைப்படம் எடுக்க முடியாது; தமிழ்நாட்டில் சாமி சிலை முன் செல்பி எடுக்கின்றனர்
கோயில் அர்ச்சகர்களே புகைப்படம் எடுத்து தங்களின் தனிப்பட்ட யூடியூப் சேனலில் பதிவிடுகின்றனர் என இதுகுறித்து மதுரை உயர்நிதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.