செல்போன் பயன்பாட்டிற்கு தடை! உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதனை தவிர கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கடை பிடிக்க வேண்டிய ஆடை கட்டுப்பாடு குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கோவில்களில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறைகள் உண்டு. ஆனால் அது பெயரளவில் மட்டுமே செயல் பாட்டில் உள்ளது. இதனை பலருமே சொல்லி வருகின்றனர். தற்போது இதனை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த சீதாராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

Temple
Temple

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், கோயில் வளாகத்தில் செல்போன்களை வைக்க பாதுகாப்பு அறை ஏற்பாடு செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதற்க்கு சமூக ஆர்வலர்களும் மத நம்பிக்கையாளர்களும் வரவேற்பு வழங்கியுள்ளார்கள் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com