ராணுவத்தை வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் !

காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
ராணுவத்தை வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் !

இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் தற்காலிகமாக பணியாற்றும் வகையில் மத்திய அரசு அக்னிபாத் எனும் திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தி இருந்தது. அக்னிபாத் திட்டத்தில் இணைந்துள்ள முதல் குழுவினருடன், காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அக்னிபாத் திட்டத்தில் இணைந்துள்ள இளைஞர்களை வரவேற்றுப் பேசிய அவர், அனைவருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்துவதில் அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நம்முடைய ராணுவத்தை வலுப்படுத்துவதிலும், எதிர்கால சவால்களுக்கு தயார்படுத்துவதிலும் அக்னிபாத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். மேலும் இளம் அக்னி வீரர்கள், இந்திய ராணுவத்தை கூடுதல் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் மாற்றுவர் என்று தெரிவித்தார்.

அக்னிபாத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அனுபவம், இளைஞர்களின் வாழ்க்கைக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்று தெரிவித்த அவர், இந்த திட்டம் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் என்றும், முப்படைகளிலும் பெண் அக்னி வீரர்களைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார்.

இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் தற்காலிகமாக பணியாற்றும் வகையில் மத்திய அரசு அக்னிபாத் எனும் திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தில் சேர விண்ணப்பித்தனர்

பாதுகாப்பு அமைச்சகத்தின் தரவுகளின்படி, முதற்கட்டமாக முப்படைகளிலும் உள்ள 46,000 பணியிடங்களுக்கு 54 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர்.

அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com