#BIG NEWS : வரலாற்றில் முதன்முறையாக... விண்வெளிக்கு சென்று கின்னஸ் சாதனை படைத்த திரைப்பட கதாபாத்திரங்கள்..!!

Project Hail Mary LEGO Minifigure Reaches Space
Project Hail Mary LEGO Minifigure Reaches Spaceimage source: space.com
Updated on

அமெரிக்க நாவலாசிரியர் ஆண்டி வீர் (Andy weir) எழுதிய அறிவியல் புனைவு நாவலைத் தழுவி, மார்ச் 2026-ல் வெளியான திரைப்படம். 'ப்ராஜெக்ட் ஹெயில் மேரி '(Project Hail Mary) இது சூரியனை மங்கச் செய்யும் வேற்றுக்கிரக நுண்ணுயிரி (Astrophage) மூலம் அழியும் நிலையில் உள்ள பூமியைக் காப்பாற்ற, ரைலாண்ட் கிரேஸ் என்ற விஞ்ஞானி விண்வெளி பயணம் மேற்கொண்டு தீர்வு காண்பதே கதை.

சூரியனின் ஆற்றலை உறிஞ்சி, பூமியின் வெப்பநிலையைக் குறைத்து, மனிதகுலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் "ஆஸ்ட்ரோபேஜ்" என்ற நுண்ணுயிரியை ஒழிக்க வேண்டும். "ஹெயில் மேரி" என்ற விண்கலத்தில் ரைலாண்ட் கிரேஸ், ஆஸ்ட்ரோபேஜ் பாதிப்பு இல்லாத 'டவ் செட்டி' (Tau Ceti) நட்சத்திர மண்டலத்திற்குப் பயணம் செய்கிறார்.

ரைலாண்ட் கிரேஸ், நினைவாற்றல் இழந்த நிலையில் விழித்து, விண்வெளியில் தனியாகப் போராடி, பின்னர் ஒரு வேற்றுக்கிரகவாதியுடன் இணைந்து பூமியைக் காப்பாற்றுகிறார்.

தனது பணி குறித்த எந்த நினைவும் இல்லாமல் ஒரு விண்மீன் பயணக் கப்பலில் கண்விழிக்கும் பள்ளி ஆசிரியராக ரியான் கோஸ்லிங் நடித்துள்ள 'ப்ராஜெக்ட் ஹெய்ல் மேரி'திரைப்படத்தின் புரமோஷனுக்காக அதில் இடம் பெற்றுள்ள ரயன் கோஸ்லிங்கின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு லெகோ மினிஃபிகர், விண்வெளியின் விளிம்பு வரை பயணித்து பாதுகாப்பாகத் திரும்பி, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

ரைலண்ட் கிரேஸ் என்ற கதாபாத்திரத்தை சித்தரிக்கும் இந்த மினியேச்சர், அந்த அறிவியல் புனைகதைத் திரைப்படத்தின் விளம்பர சாகசத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 20, 2026 அன்று வளிமண்டலத்தின் மேல் அடுக்குக்கு ஏவப்பட்டது.

ஒரு பிளாஸ்டிக் விண்கலம், ஒரு உயரமான பலூன் மற்றும் மிகவும் லட்சியமான ஒரு திட்டத்துடன் தொடங்கியது இந்த மிஷன்.அதன்படி ஹெய்ல் மேரி விண்கலத்தின் லெகோ மாதிரி மற்றும் ராக்கி கதாபாத்திரம் ஆகியவற்றுடன் அந்தச் சிறு உருவம், உயரமான பலூன் ஒன்றின் மூலம் கொண்டு செல்லப்பட்டு, மார்ச் 20, 2026 அன்று, வடக்கு வேல்ஸில் உள்ள க்வினெட் கவுண்டியின் சரிவான மலைகளிலிருந்து ஏவப்பட்டது. அது பூமிக்கு மேலே கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர் உயரம் வரை சென்று, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளிக்கு அருகில் நிலைத்திருந்தது.பின்னர் மீண்டும் கீழே மிதந்து வந்து, எந்தச் சேதமும் இன்றி ஒரு அமைதியான புல்வெளியில் தரையிறங்கியது.

இந்த லெகோ தொகுப்பு, இங்கிலாந்தின் க்வினெட் கவுன்டிக்கு மேலே 114,790 அடி (34,988 மீட்டர்) உயரத்தை எட்டியது. இது ஏறக்குறைய 22 மைல் உயரத்திற்குச் சமமான வளிமண்டலத்தின் மேல் அடுக்காகும். ஒரு லெகோ செட்டை மிக உயரமான இடத்திலிருந்து ஏவி மீட்டெடுத்ததற்காக தற்போது அது அதிகாரப்பூர்வமாக ஒரு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

இந்த சாகச நிகழ்ச்சியை சோனி பிக்சர்ஸ் யுகே மற்றும் உயரமான பலூன் பயணங்களில் நிபுணத்துவம் பெற்ற, இங்கிலாந்தைச் சேர்ந்த சென்ட் இன்டு ஸ்பேஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்தன. அந்தத் திரைப்படத்தின் கருப்பொருளை இந்த சாகசம் பிரதிபலித்தது. அப்படத்தின் இயக்குனர்களான ஃபில் லார்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லர், இந்த சாதனைக்கான அதிகாரப்பூர்வ கின்னஸ் சான்றிதழை ஏப்ரல் 13, 2026 அன்று பெற்றனர்.

logo
Kalki Online
kalkionline.com