இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது சொந்த சித்தப்பா தந்த சொத்து மோசடி புகார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது சொந்த சித்தப்பா தந்த சொத்து மோசடி புகார்.

த்தனை கோடி பணம் இருந்தாலும் பங்காளி பிரச்சினை என்பது சொந்தங்களிடையே என்றும் இருந்து கொண்டேதான் உள்ளது என்பதற்கு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது அவரின் உறவினர்கள் தந்த புகார் சாட்சி. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின்றி அலட்சியமான போக்கைத் தந்து விடுகிறதா பெயரும் புகழும்?

திரைப்பட இயக்குனரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனின் பூர்வீகம் திருச்சி மாவட்டம் லால்குடி. இவரின் தந்தை பெயர் சிவக்கொழுந்து. இவருடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். இவர்களில் விக்னேஷின் பெரியப்பா மாணிக்கம். இவர் லால்குடியில் தனது மனைவி பிரேமாவுடன் வசித்து வருகிறார். விக்னேஷ் சிவனின் சித்தப்பாவான குஞ்சிதபாதம் மனைவி சரோஜா உடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். விக்னேஷ்வரன் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாணிக்கம் மற்றும் குஞ்சதபாதம் ஆகியோர் நேற்று ஒரு புகார் மனுவை அளித்தனர்.

அதில் “எங்களுக்கு தெரியாமல் எங்கள் தம்பி சிவக்கொழுந்து எங்கள் பொது சொத்தை ஏமாற்றி விற்று விட்டார். எனவே மோசடியாக பொது சொத்தை விற்ற சிவக்கொழுந்துவின் வாரிசுகளான அவர் மனைவி மீனாகுமாரி, மகன் விக்னேஷ் சிவன், மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். நிலத்தை வாங்கியவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தி நிலத்தை மீட்டு முழுமையாக எங்களுக்கு கிடைக்க அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் அவர்கள் மீது கிரிமினல் மோசடி வழக்கு தொடர வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்

      இது குறித்து விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதம்  “இருதயத்தில் எனக்கு நான்கு குழாய்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்காக எனக்குரிய சொத்தை விற்க முடிவு செய்தேன். ஆனால் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து சொத்தை ஏமாற்றி விற்று விட்டார். இது குறித்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் சொத்தில் ஒரு பங்கு மட்டுமே சிவக்கொழுந்துவிற்கு உரிமை உண்டு என்றும் மீதி பங்குகள் மற்ற எட்டு பேருக்கும் உரியது என தீர்ப்பு வந்துள்ளது. இது குறித்து பலமுறை நாங்கள் கூறியும் விக்னேஷ் சிவன்  இந்தப் பிரச்சினையை தீர்க்க மறுக்கிறார். அவரும் அவரது தாயார் மீனாகுமாரியும் உதவினால் மட்டுமே இந்த பிரச்சனை தீரும் என்றார். அவரின் மனைவி சரோஜா “எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை எங்களுக்கு குழந்தைகளும் இல்லை எனது  கணவரை காப்பாற்ற சொத்தை மீட்டு தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

      சொத்துகள் சேர்ப்பது நல்லதுதான் அவைகள் உரிய நேரத்தில் வாழ்க்கைக்கு உதவினால் மட்டும். விக்னேஷ் சிவன் கவனத்திற்கு இந்த விஷயம் விரைவில் சென்று அவர் குடும்பத்தினரின் சந்தோஷத்தில் அவரும் பங்குபெற வேண்டும். உறவுகளின் உன்னதம் பணத்தினால் உடைவது சரியல்ல.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com