மனைவி பெயரில் வாங்கப்படும் சொத்தை பினாமி பரிவர்த்தனை என அழைக்க முடியாது: கொல்கத்தா உயர் நீதிமன்றம்!

மனைவி பெயரில் வாங்கப்படும் சொத்தை பினாமி பரிவர்த்தனை என அழைக்க முடியாது: கொல்கத்தா உயர் நீதிமன்றம்!

மனைவி பெயரில் வாங்கப்படும் சொத்தை பினாமி பரிவர்த்தனை என்று அழைக்க முடியாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேகர் என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மறைந்த தனது தந்தை சைலேந்திராதனது தாய் லைலாவுக்கு பினாமி சொத்து கொடுத்ததாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்த நிலையில், தீர்ப்பு வழங்கியுள்ள கொல்கத்த உயர் நீதிமன்ற  நீதிபதிகள் தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் பார்த்த சார்த்தி சாட்டர்ஜி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், “மனைவி பெயரில் வாங்கப்படும் சொத்தை பினாமி பரிவர்த்தனை என்று கூற முடியாது என அதிரடியாக அறிவித்துள்ளது.

அதேபோல், இந்திய சமுதாயத்தில், ஒரு கணவன் தன் மனைவியின் பெயரில் சொத்து வாங்குவதற்கு பணம் வழங்கினால், அதை பினாமி பரிவர்த்தனை எனக் கருதவேண்டியதில்லை. பணத்தின் ஆதாரம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஒரு முக்கியமான காரணியாகும். ஆனால் தீர்க்கமான ஒன்று அல்ல" என்று நிதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும், " இந்த வழக்கு விசாரணையின் போது, இரண்டு வகையான பினாமி பரிவர்த்தனைகள் பொதுவாக அங்கீகரிக்கப்படுகின்றன என தெரிவித்த நீதிபதிகள் முதல் வகை, ஒரு நபர் தனது சொந்தப் பணத்தில் மற்றொரு நபரின் பெயரில் ஒரு சொத்தை வாங்குகிறார், ஆனால் அதில், அந்த மற்றொரு நபருக்கு அந்த சொத்து பயனளிக்கும் நோக்கம் இருக்க வேண்டுமென்பதில்லை. பினாமி சொத்து பரிவர்த்தனையில் இது ஒரு வகை.

இரண்டாவது வகையில், "பினாமி பரிவர்த்தனை என்று அழைக்கப்படுகிறது", சொத்தின் உரிமையாளர் சொத்துக்கான உரிமையை மாற்றும் நோக்கமின்றி மற்றொருவருக்கு ஆதரவாக ஒரு பரிமாற்ற பத்திரத்தை செயல்படுத்துகிறார். இந்த இரண்டாவது வகையில், மாற்றுபவர் உண்மையான உரிமையாளராக தொடர்கிறார்" இது ஒரு வகை என்று நீதிமன்றம் கூறியதுடன் சொத்து வழக்கை தொடர்ந்துள்ள மகன் தனது குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிவிட்டதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், மேற்கண்ட கொல்கத்தா வழக்கில், வருமான ஆதாரம் இல்லாத வீட்டுப் பெண் அதாவது மனைவி பெயரில் கடந்த 1969ம் ஆண்டு தந்தை சொத்து வாங்கி பதிவு செய்துள்ளார். அதில் இரண்டு மாடி வீடு கட்டினார். 1999 இல் அவர் இறந்த பிறகு, வாரிசு சட்டங்களின்படி, அவரது மனைவி, மகன் மற்றும் மகள்

ஆகியோர் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைப் பெற்றனர். மகன் 2011 ஆம் ஆண்டு வரை அந்த வீட்டில் இருந்தார், ஆனால் அவர் வெளியே சென்றதும், சொத்து தனக்கும், அவனது தாய் மற்றும் சகோதரிக்கும் இடையே இரண்டு பாகமாக பிரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார், ஆனால், மற்ற இரு தரப்பினரும் அதை நிராகரித்தனர். எனவே, தாயின் பெயரில் இருக்கும் சொத்தானது பினாமி பரிவர்த்தனை மூலம் பெறப்பட்டதாகக் கூறி மகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், மகனின் இந்தச் செய்கைகளால் கோபமடைந்த தாய், 2019 இல் இறப்பதற்கு முன்பு தனது சொத்தின் பங்கை தனது மகளுக்கு பரிசளித்தார்.

தாயின் பெயரில் இருக்கும் சொத்து பினாமி சொத்து என்று நிரூபிக்கப்பட்டால் அதன் மூலமாக அந்த சொத்துக்கு பிற வாரிசுகள் உரிமை கொண்டாடலாம் என்று நினைத்து மகன் தொடர்ந்து வழக்குக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கண்ட வகையில் தீர்ப்பளித்திருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com