‘செழிப்பான தொடர் கடை திருடி’ - திருடுவதையே வாழ்நாள் வேலையாக வைத்திருந்த பெண் கைது!

‘செழிப்பான தொடர் கடை திருடி’ - திருடுவதையே வாழ்நாள் வேலையாக வைத்திருந்த பெண் கைது!
Published on

இங்கிலாந்தில் பெரிய பெரிய கடைகளில் நீண்ட காலமாகப் பல மோசடிகளில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார். நரிந்தர் கெளர் எனும் அந்தப் பெண் நீண்டகாலமாகவே திட்டமிட்டு மிகப் பரந்த அளவில் இந்த மோசடிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்று CPS வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் மூத்த அரசு வழக்கறிஞரான ஜியோவானி டி'அலெஸாண்ட்ரோ கூறினார்

அடிப்படையில் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான இந்த நரிந்தர் கெளர், தொழிற்சாலை மோசடி அளவுக்கு மிகப்பரந்த அளவிலான பொருட்களைத் திருடியதாகவும், உண்மையில் தான் விலை கொடுத்து வாங்காத பொருட்களைத் திருப்பித் தருமாறு கடைகளை ஏமாற்றியதாகவும், இங்கிலாந்து நீதிமன்றத்தால் பல மோசடி மற்றும் திருட்டு தொடர்புடைய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

நரிந்தர் கெளர் அல்லது நினா டியாரா, கடந்த வாரம் நான்கு மாதங்கள் நீடித்த ஒரு விசாரணையின் முடிவில், மோசடி, கிரிமினல் சொத்துக்களை வைத்திருத்தல், திருட்டு சொத்துக்களை பரிமாற்றம் செய்தல் மற்றும் நீதியின் போக்கை மாற்றியமைத்தல் உள்ளிட்ட 26 குற்றச்சாட்டுகளில் UK கிரவுன் ப்ராசிகியூஷன் சர்வீஸ் (CPS) குற்றச்சாட்டின் கீழ் குளோசெஸ்டர் கிரவுன் கோர்ட் மூலமாகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

53 வயதான நரிந்தர் கெளர், லண்டன் கோர்ட்டால் (CPS) "செழிப்பான தொடர் கடை திருடி" என்று அழைக்கப்பட்டார், இந்த அழைப்பு, தனது திருட்டுத் தொழிலுக்காக கெளர் நாடு முழுவதும் பயணம் செய்வதையும், ஹை ஸ்ட்ரீட் கடைகளில் பொருட்களைத் திருடுவதையும், நேர்மையற்ற முறையில் பணத்தைத் திரும்பப் பெறுவதையும் தனது முழுநேர வாழ்க்கையாகக் கொண்டதன் காரணமாக அவருக்கு லண்டன் நீதிமன்றம் வழங்கிய பெயர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த பொருட்கள், திருடிய பொருட்களின் மீது கெளருக்கு உரிமை இல்லை.

அவரது வீட்டில் இரண்டு முறை போலீசார் நடத்திய சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 150,000 பவுண்டுகள் பணமும், திருடப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜூலை 2015 மற்றும் பிப்ரவரி 2019 க்கு இடையில் கெளர் பல்வேறு சில்லறை விற்பனையாளர்களை ஆயிரம் முறை மோசடி செய்துள்ளார் என்பதை CPS ஆல் நிரூபிக்க முடிந்தது, எனவே இப்போது அவர் தண்டனை விதிக்கப்படும் வரை காவலில் இருக்கிறார்.

நரிந்தர் கெளரின் தொடர் திருட்டு குற்றம் குறித்துப் பேசும் போது அரசு வழக்கறிஞரான ஜியோவானி டி'அலெஸாண்ட்ரோ தெரிவித்த விஷயம் குறிப்பிடத்தக்கது, அது என்னவென்றால் "இந்த திருட்டு முறையை நரிந்தர் கெளர் மிகவும் இலாபகரமான முழுநேர வேலையாகச் செய்திருக்கிறார், இந்தக் குற்றம் செய்த காலத்தில் அவரால் அரை மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் சம்பாதிக்க முடிந்திருக்கிறதூ. அத்துடன், அவர் தனது ஏமாற்று வேலைகளைச் செயல்படுத்த அசாதாரணமான அளவிற்குச் சென்றிருக்கிறார், சில்லறை விற்பனையாளரை ஏமாற்றுவதற்கான நூதனமான பல வழிமுறைகளைக் கண்டுபிடித்து, அதற்காக பின்னர் நாட்டின் எல்லா இடங்களுக்கும் பயணம் செய்திருக்கிறார். இந்த மோசடியைப் புரிந்து கொண்டு நாடு எதிர்வினையாற்ற வேண்டும்" என்று அவர் கூறினார்.

தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் தான் அகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கெளர் தனது பெயரை சட்டப்பூர்வமாக மாற்றி, புதிய வங்கிக் கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை இரண்டாவது அடையாளத்துடன் பெற்றிருக்கிறார். இது சட்டவிரோதமானது.

அவர் இப்போது தனது குற்றங்களுக்காக ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான தண்டனையை எதிர்கொள்ளவிருக்கிறார், மேலும் சட்டம் அனுமதிக்கும் அளவுக்கு அவரது முறைகேடான திருட்டுக் குற்றங்களுக்கான ஆதாயங்களை மீட்டெடுக்க வழக்குத் தொடரப்பட உள்ளது,” என்றும் அரசு வழக்கறிஞர் கூறினார்.

அது மட்டுமல்ல, இத்தனை பெரிய அளவிலான குற்றங்களை கெளர் மட்டுமே தனி நபராக நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை. இதன் பின்னணியில் ஆண் நண்பர்கள் எவரேனும் இருக்கலாம். அது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது என்றவர்; கெளரின் குற்றங்கள் இப்போது வரையிலும் துண்டு துண்டாகத் தனித்தனியாக ஒரு சிறு இணுக்கு கூட விடாமல் ஆராயப்பட்டு அவற்றுக்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு தகுந்த சான்றுகளுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட பிறகே அவருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

டெபிட் கார்டுகளைத் திருடியது, பெரிய கடைகளில் திருடி விட்டு அந்தப் பொருட்கள் முன்னமே டீல்களில் வாங்கப்பட்டவை போலக்காட்டி அதற்குண்டான பணத்தை ரிஃபண்டாகப் பெற்றது, கிரெடிட் கார்டுகளைத் திருடி பண மோசடி செய்தது, அதற்காக தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள கிளெவர்டன் பகுதிக்கான உள்ளூர் அதிகாரசபையான வில்ட்ஷயர் கவுன்சிலை ஏமாற்ற முயன்றது, குற்றங்களுக்கு தண்டனை பெறாமல் இருக்கவும், ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தவும், நீதிமன்றத்தில் பொய் கூறி, பொய்யான ஆவணங்களை தாக்கல் செய்தது உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்குமான ஆதார சேகரிப்பில் காவல்துறையுடன் இணைந்து நீதிமன்றமும் ஆற்றலுடன் செயல்பட்டது. அதன் காரணமாகவே நிதித் தரவு, சில்லறைப் பதிவுகள், சாட்சி சான்றுகள் மற்றும் CCTV ஆகியவற்றைப் பயன்படுத்தி, கெளரின் குற்றச் செயல்களை நிரூபிக்கும் இந்த வழக்கை திறனுடன் நடத்தி குற்றங்களை நிரூபிக்க முடிந்தது என்று நீதிமன்றம் கூறியது.

சிசிடிவியில் அவர் கடைகளுக்குள் நுழைவதும், அலமாரிகளில் இருந்து பொருட்களை எடுத்து, முன்பு வாங்கியது போல் டீல்ஸுக்கு எடுத்துச் செல்வதும் தெரிந்தது.

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி, தீர்ப்பை பாதிக்க முயற்சித்து, நீதிமன்ற நடவடிக்கைகளின் போது பொய் சொல்வது அவருடைய குற்றத்தின் இறுதிப் பகுதி.

நீதிமன்றங்களில் அவள் செய்த ஒவ்வொரு பொய்யும் துண்டு துண்டாக வெளிக்கொணரப்பட்டது என்று சிபிஎஸ் கூறியது.

இப்படி நரிந்தர் கெளரின் பரந்த அளவிலானதொரு திருட்டுக் குற்றங்களால், பூட்ஸ், டிபன்ஹாம்ஸ், ஹவுஸ் ஆஃப் ஃப்ரேசர், டிகே மேக்ஸ், மான்சூன் மற்றும் ஜான் லூயிஸ் உள்ளிட்ட சில UK ஹை ஸ்ட்ரீட் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பரந்த அளவிலான மோசடியில் சிக்கிப் பெரிதும் பாதிக்கப்பட்டது தற்போது அம்பலமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com