சாலை பள்ளங்களில் தீபம் ஏற்றி நூதன போராட்டம்!

நூதன போராட்டம்
நூதன போராட்டம்
Published on

மைசூரு நகரின் சாலைகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. சாலையில் இரவு நேரங்களில் நடந்து செல்பவர்களும் இந்த பள்ளங்களில் தவறி விழுந்து விபத்து நேர்கிறது.

 இந்நிலையில் மைசூரு மாநகராட்சி இந்த சாலை பள்ளங்களை சரிசெய்து மூடாததை கண்டித்து, மைசூரு கிருஷ்ணராஜா இளைஞர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் உள்ள  பள்ளங்களைச் சுற்றிலும் அகல விளக்குகள் தீபம் ஏற்றிவைத்து சாலைமறியல் செய்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது;

 ‘’மைசூருவில் தொடர் மழை, மற்றும் மோசமான சாலை புனரமைப்பு பணிகள்  காரணமாக, நகரின் பல சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன.

குறிப்பாக மத்வாச்சார்யா சாலையில் உள்ள பள்ளங்களால், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தாத மைசூரு மாநகராட்சியை கண்டித்து  இப்படி எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.  

நகரிலுள்ள அனைத்து பள்ளங்களையும் உடனடியாக மூட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. ஏற்கனவே தசராவுக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும் என அமைச்சரும், மேயரும் உறுதியளித்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அதனால்தான் இப்படி இந்த பிரச்சினையை தீபம் ஏற்றி வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறோம். என்றனர், போராட்டம் நடத்திய இளைஞர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com