பி.எஃப் சந்தாதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம்!

பி.எஃப் சந்தாதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம்!

சென்னை வடக்கு, தாம்பரம் மண்டல அலுவலகங்களில் வரும் ஜனவரி 10-ம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது என்று சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சி.அமுதா கூறியுள்ளார்.

வடக்கு மண்டல வைப்பு நிதி அலுவலகத்துக்கு உட்பட்ட சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளலாம்" என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் பி.எஃப் சந்தாதாரர்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 12 மணி வரையும், தொழிலதிபர்களுக்கு மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சி.அமுதா வெளியிடுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, "வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) நிறுவனம் வாடிக்கையாளர்களின் குறைகளை விரைவாக தீர்க்கும் வகையில் 'நிதி உங்கள் அருகாமையில்' என்ற பெயரில் வடக்கு மண்டல வைப்பு நிதி வளாகத்தில் வருகிற 10-ம் தேதி குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த உள்ளது.

PF
PF

தாம்பர மண்டல வருங்கால வைப்பு நிதி கமிசனர் ஹிமான்ஷூ குமார் வெளியிடுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, "தாம்பர மண்டல அலுவலகத்தில் வருகிற 10-ம் தேதி ஜனவரி மாதத்துக்கான வருங்கால வைப்பு நிதி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் சந்தாதாரர்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 12 மணி வரையும், தொழிலதிபர்களுக்கு மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும் நடைபெற உள்ளது.

சந்தாதாரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களது தீர்க்கப்படாத குறைகளின் தீர்வை காண வைப்பு நிதியின் குறைதீர்க்கும் கூட்டத்துக்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு, தங்களது பி.எஃப்தி கணக்கு எண், தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன் மேற்கு தாம்பரத்தில் உள்ள மண்டல அலுவலக முகவரிக்கோ அல்லது மண்டல அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரியிடமோ நேரில் வந்து வருகிற 6-ம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கூட்டத்தில் கலந்துகொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com