
அக்., 1 ஆயுதபூஜை, 2ம்தேதி விஜயதசமி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை புதன் மற்றும் வியாழக்கிழமை வருகிறது. ஆனால், 3ம் தேதி வெள்ளிக்கிழமை, அரசு வேலை நாளாக உள்ளது. அடுத்து 4ம்தேதி சனிக்கிழமை, 5ம் தேதி ஞாயிறு அரசு விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே, 3ம் தேதி விடுமுறை நாளாக அரசு அறிவித்தால், ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்.
பண்டிகையை முன்னிட்டு வெளியூர், சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ள அரசு ஊழியர்களும் செல்ல முடியாத நிலையே உள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக அக்டோபர் 3-ம் தேதியும் அரசு விடுமுறை என அறிவித்து, தொடர் விடுமுறையாக 5 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கும்படி அரசு ஊழியர்கள் சார்பாக தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், அக்.,3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே இந்நாட்கள் தசரா விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.