புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்! சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் மானியம்!

புதுச்சேரி  பட்ஜெட்  தாக்கல்! சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் மானியம்!
Published on

புதுச்சேரி முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ரங்கசாமி சட்டமன்றத்தில் இன்று முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9 ம் தேதி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது.

பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, அவை நடவடிக்கையை சபாநாயகர் செல்வம் நாளை வரை ஒத்திவைத்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டம், இலவச மடிக்கனிணி, மாலையில் சிறுதானிய சிற்றுண்டி, முதியோருக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு போன்ற பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சியை மேம்படுத்த புதுவையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும் எனவும், மீனவர் உதவித் தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.3,500-ஆக உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் குழந்தை பிறந்தவுடன் 50 ஆயிரம் ரூபாய் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 18 ஆண்டு காலத்திற்கு நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தப்படும்.

மேலும் சுனாமி நினைவிடம், கடலுக்கடியில் பூங்கா, பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் கருவிகள் போன்ற திட்டங்களும் இடம்பெற்றிருந்தன. முக்கியமான அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 126 கோடி ரூபாய் செலவாகும் எனவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com