பஞ்சாப் ஆளுநராக இருந்தவந்த பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா!

பன்வாரிலால் புரோகித்
பன்வாரிலால் புரோகித்

ஞ்சாப் மாநில ஆளுநராக இருந்துவந்த பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தன்னுடைய ஆளுநர் பதவி ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி மூர்முவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.  பன்வாரிலால் புரோகித் ஆகஸ்ட் 2021 முதல் பஞ்சாப் ஆளுநராக பதவி வகித்து வந்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,”எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகள் காரணமாகவும், பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து அதை ஏற்றுக்கொண்டு ஆவண செய்யுங்கள்” என கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் எம்பியாக தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கிய  பன்வாரிலால் புரோகித் நாக்பூரில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதில் காங்கிரஸிலிருந்து இரண்டு முறையும் பா.ஜ.கவிலிருந்து ஒரு முறையும் தேர்வுச் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்வாரிலால் புரோஹித், முன்பு தமிழ்நாடு மற்றும் அஸ்ஸாம் மாநில ஆளுநராக பணியாற்றினார். பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்துடன் நீண்ட காலமாக வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்த பன்வாரிலால் புரோகித், மாநிலம் தொடர்பான பல பிரச்சனைகளில் விளக்கம் கேட்டு முதல்வர் பகவந்த் மானுக்கு தொடர்ச்சியான கடிதங்களை அனுப்பினார்.

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் பன்வாரிலால் புரோஹித்துக்கும் மோதல் போக்கு நீட்டித்துவந்த நிலையில் ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்திருப்பது பஞ்சாப் அரசியலில் கவனம்பெற்றுள்ளது. நவம்பர் 10, 2023 அன்று, பஞ்சாப் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட, விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்றது.

இதையும் படியுங்கள்:
Abby & Brittany: ஆசிரியைகளாக வலம் வரும் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்!
பன்வாரிலால் புரோகித்

பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிரான வழக்கை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, "நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்" என்றுகூறி எச்சரித்தது. இந்த விவகாரம் தேசியளவில் பேசுப்பொருளானது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com