அரியானாவில் காருக்குள் 2 இளைஞர்களின் உடல்கள் கருகிய நிலையில் மீடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலத்திலுள்ள பிவானி மாவட்டத்தில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருந்தது. அருகில் சென்று பார்த்தபோது காருக்குள் இரு இளைஞர்கள் எரிந்த நிலையில் இருந்தது கண்டு அவ்வூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலிஸார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது, ”பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பஹாரி தாலுகாவின் காட்மீகா கிராமத்தில் வசிக்கும் நசீர் மற்றும் ஜுனைத் ஆகியோர் புதன்கிழமை கடத்தப்பட்டுள்ளனர். நேற்று காலை பிவானியில் உள்ள லோஹாருவில் எரிந்த காரில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
கார் எரிந்து கிடப்பது குறித்து கிராமவாசி ஒருவர் எங்களுக்கு தகவல் கொடுத்தார். நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் எரிந்த நிலையில் இரண்டு உடல்கள் இருப்பதைக் கண்டுடோம்.
பரத்பூரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோஹாருவுக்கு காரில் சென்று பின்னர் அவர்களை தீ வைத்து எரிக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
இந்நிலையில் காருக்குள் எரிந்து உயிரிழந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த நசீர் (25), ஜூனைத் (35) என்பது தெரியவந்தது. ‘பசு காவலர்கள் இவர்களை கடத்தி கொலை செய்திருக்கலாம்’ என சந்தேகம் எழுந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட இருவரையும் நேற்று முன்தினம் ஒரு கும்பல் கடத்தி சென்று விட்டதாக அவர்களது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்திருந்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதற்கிடையே இளைஞர்கள் உயிரிழப்பில் “பசு காவலர்கள்“ என்று அழைக்கப்படுவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூனைத் மீது பசுக் கடத்தல் தொடர்பாக 5 வழக்கு இருப்பதாகவும் நசீர் மீது எந்த வழக்கும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரில் மோனு மானேசர், பஜ்ரங்தளம் அமைப்பை சேர்ந்தவர்.
அரியானாவில் 2 இளைஞர்களின் உடல்கள் கருகி நிலையில மீடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.