பள்ளி மாணவர்களே ரெடியா ? காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..!

SCHOOL EXAM
SCHOOL EXAM
Published on

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தனியார் பள்ளிகள இயக்குனர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கி செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே தேதிகளில் துவங்கி, காலாண்டு தேர்வு முடிவடையும்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வுகள் முன்கூட்டியே தொடங்கி நடைபெற உள்ளது. அதன்படி அவர்களுக்கு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் காலாண்டு தேர்வு செப்டம்பர் 25ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் வாழ்க்கைப் பாடங்கள்!
SCHOOL EXAM

10, 12 வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வுகள் நடைபெறும் எனவும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 11 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்பட உள்ளது.

அதன்படி காலாண்டு தேர்வு விடுமுறை செப்டம்பர் 27 ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதில் அக்டோபர் 1ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com