முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி - ரஜினி புகழாரம்!

முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி - ரஜினி புகழாரம்!
Published on

"நண்பர் சசிகுமாருக்கு வெகு நாட்களுக்குப் பிறகு அருமையான ஒரு கருத்துள்ள வெற்றிப் படம்" அமைந்திருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.

இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கி நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடித்துள்ள அயோத்தி திரைப்படத்தினை, ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்தில் சசிகுமாருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் எனபவர் இசையமைத்துள்ளார்.

ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா, புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் NT ரகுநந்தன்  இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருந்தார். 

ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மனிதத்தை உயர்த்தி பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள அயோத்தி திரைப்படத்தினை பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த் . நடிகரும் இயக்குனருமான சசிகுமாருக்கு இப்படம் வெற்றிப்படமாகஅமைத்து விட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து தரப்பினரும் பாராட்டும் ஒன்றாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது . மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்திய படம் எனக் கொண்டாடப்பட்ட ‘அயோத்தி’ திரைப்படம் கடந்த மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது சிறப்பான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், அயோத்தி படத்தினை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சசிகுமாரையும், படக்குழுவினரையும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அயோத்தி திரைப்படம், நண்பர் சசிகுமாருக்கு வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

மதம், மூட நம்பிக்கைகள், ஆண் ஆதிக்க மனப்பான்மை உள்ளிட்ட பல சமூக பிரச்சினைகளை இந்தக் கதை சமரசமின்றி பேசியதாக பல தரப்பினரும் வாழ்த்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com