டெஸ்லா நிறுவனத்தின் மீது தொடரும் இனப் பாகுபாடு குற்றச்சாட்டுக்கள்!

டெஸ்லா நிறுவனத்தின் மீது தொடரும் இனப் பாகுபாடு குற்றச்சாட்டுக்கள்!
Published on

டெஸ்லா நிறுவனத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ப்ரெமாண்டில் கார் தயாரிப்பு தொழிற்சாலையில் இன பாகுபாடுகள் நடைபெறுவதாக மீண்டும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் இனம் சார்ந்த பாகுபாடு அதிகம் இருப்பதாகவும், தாங்கள் இங்கு பாதுகாப்பாக உணரவில்லை என்றும் 2017-ல் முன்னாள் டெஸ்லா ஊழியரான மார்க்கஸ் வாகன் டெஸ்லா நிறுவனத்தின் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

டெஸ்லா நிறுவனம் தங்கள் பணியாளர்களுக்கிடையே இனப் பாகுபாடு ஏற்படுவதைத் தடுக்கவில்லை எனக் கூறி அந்நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட இதே போன்ற ஒரு வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 3.2 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு வழங்க கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருக்கிறது சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கும் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.

அப்போதே 2016-17- ல் டெஸ்லாவின் அந்தத் தொழிற்சாலையில் வேலை பார்த்த 100-க்கு மேற்பட்ட கருப்பினத்தவர்கள் மார்க்கஸின் வழக்கிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

தற்போது அந்நிறுவனத்தின் இனப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட மேலும் 100 பேரின் வாக்குமூலத்தை தன்னுடைய வழக்கோடு இணைத்து, 2017- ல் தான் தொடர்ந்த வழக்கை கிளாஸ்-ஆக்ஷன் வழக்காக மாற்ற கோரிக்கை விடுத்திருக்கிறார் மார்க்கஸ்.

அதிகம் பேர் கொண்ட ஒரு குழவின் சார்பில் தொடரப்படும் வழக்கு கிளாஸ்-ஆக்ஷன் வழக்கு எனப்படுகிறது. இவ்வகை வழக்குகள் ஒரு நிறுவனத்தின் மீது தொடரப்பட்டால், அந்நிறுவனம் அளிக்க வேண்டிய இழப்பீட்டின் அளவு அதிகரிக்கும்.

ஆனால் தங்கள் நிறுவனத்தின் தொழில்சாலைகளில் இனப் பாகுபாடு இருப்பது என்பதே முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு எனக் கூறி தங்களுடைய பிளாக்கில் பதிவொன்றையும் பதிவு செய்திருக்கிறது டெஸ்லா நிறுவனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com