இந்தியாவில் உள்ள முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது ஹூருன் (Hurun). இந்த பட்டியலில் சுயமாக தொழில் தொடங்கி பில்லியனரான மூன்று பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இம்மூன்று பெண்களில் 3.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார், ராதா வேம்பு. கோடீஸ்வரர்கள் பட்டியலில் 7.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஃபல்குனி நாயர் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தை பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜும்தார் பெற்றுள்ளார்.
1 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புகளை கொண்டு இந்தியாவின் மூன்றாவது பெண் கோடீஸ்வரராக ராதா வேம்பு திகழ்கிறார்.
ராதா வேம்பு இந்தியாவின் மிக முக்கியமான பெண் தொழில் முனைவோராக சாதனை படைத்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு 1 லட்சத்து 29 ஆயிரம் கோடியாகும். ஜோஹோ மெயில் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளரான இவர் ஸ்ரீதர் வேம்புவின் சகோதரியாவார்.49 வயதான ராதா வேம்பு, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) தொழில்துறை மேலாண்மையில் பட்டம் பெற்றவர். 2007-ம் ஆண்டிலிருந்து ஜோஹோ மெயிலின் திட்ட மேலாளராக ராதா வேம்பு உள்ளார்.
சென்னையை தலைமை இடமாக கொண்ட ஜோஹோ (Zoho) நிறுவனம், ஸ்ரீதர் வேம்பு என்பவரால் தொடங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு நிலவரப்படி, உலகம் முழுவதும் ஒன்பது நாடுகளில் கிட்டத்தட்ட 12 அலுவலகங்களை கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டுள்ளது. ராதா வேம்பு தற்போது “ஜானகி ஹைடெக் அக்ரோ பிரைவேட் லிமிடெட்” எனும் விவசாயம் சார்ந்த நிறுவனத்தையும் , ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹைலேண்ட் வேலி கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் இயக்குநராகவும் உள்ளார்.
2022ம் வருடம் ஏப்ரல் மாதத்தின் நிலவரப்படி ராதா வேம்புவின் நிகர சொத்து மதிப்பு 129 ஆயிரம் கோடி ரூபாயாகும். அவரது சொத்துக்களில் பெரும்பகுதி ஜோஹோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஆகும். 2021ம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் ஸ்ரீதர் வேம்பு மற்றும் ராதா வேம்பு உடன் பிறப்புகள் 285 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 55-வது இடத்தில் உள்ளனர்